அல்லாஹ்வே எனது இரட்சகன்
அல்லாஹ் கூறுகிறான்: {மனிதர்களே! உங்களையும்உங்களுக்கு முன்பிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்.(அவ்வாறு செய்வதனால் மட்டுமே)நீங்கள் உங்களைக் காப்பாற்றிக்கொள்ளமுடியும்} [அல் பகரா:21].
- அல்லாஹ் கூறுகிறான்: {அவன்தான் அல்லாஹ், உண்மையாக வணங்குவதற்குத் தகுதியானவன் அவனைத்தவிர வேறுயாறுமில்லை} [அல் ஹஷ்ர் :22].
- அல்லாஹ் கூறுகிறான்: {எந்தப்பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை. அவன் அனைத்தையும் செவியுறுபவனும், பார்ப்பவனும் ஆவான்} [அஷ்ஷூரா :11].
- அல்லாஹ்தான் எனதும் மற்ற அனைத்து படைப்பினங்களினதும் இரட்சகனுமாவான். அவன் (அனைத்தினதும்)அதிபதி, படைப்பாளன் ,வாழ்வாதாரத்தை தருபவன்,அனைத்து விடயங்களையும் திட்டமிடுபவன்.
- வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் மாத்திரமே, அவனைத் தவிர இரட்சகனோ, உண்மையான கடவுளோ வேறு எவருமில்லை.
- அவனுக்கு அழகிய திருநாமங்களும், உயர் பண்புகளும் உண்டு. அவை தனக்கு இருப்பதாக அவனும், அவனது தூதரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்திருநாமங்களும், பண்புகளும் அழகிலும், பரிபூரணத்தன்மையிலும் மிகைத்து நிற்கிறது. எந்தப்பொருளும் அவனுக்கு ஒப்பானதாய் இல்லை.அவன் அனைத்தையும் செவியுறுபவனும், பார்ப்பவனும் ஆவான்.
அவனின் அழகிய திருநாமங்களில் சில:
- (அர்ரஸ்ஸாக்) வாழ்வாதாரத்தை வழங்குபவன்
- (அர்ரஹ்மான்) அளவற்ற அருளாளன்
- (அல் கதீர்) சர்வ வல்லமை படைத்தவன்
- (அல்மலிக்) அரசன்
- (அஸ்ஸமீஉ) யாவற்றையும் செவிமடுப்பவன்
- (அஸ்ஸலாமு) அனைத்துக் குறைகளை விட்டும் நீங்கியவன்
- (அல்பஸீர்) யாவற்றையும் பார்ப்பவன்
- (அல்வகீல்) பொறுப்பேற்பவன்
- (அல் காலிக்) படைப்பாளன்
- (அல்லதீப்) மிக நுட்பமானவன்
- (அல் காபி) போதுமானவன்
- "அல் கபூர் "பெரும் மன்னிப்பாளன்
* முஸ்லிம் அல்லாஹ்வின் படைப்பின் அதிசயம் குறித்தும், அவற்றிற்கான தேவைகளை அவன் இலகுபடுத்தி கொடுத்தது தொடர்பாகவும் சிந்தித்தல் வேண்டும். அவ்வாறான அதிசயங்களில் ஒன்றாக, அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரினங்கள் தமது சின்னஞ் சிறுசுகளை பாராமிரிப்பதில் கவனம் செலுத்துவது உள்ளது. குறிப்பாக அவைகள் பெரிதாகி தன்னில் தங்கி வாழும் நிலை வரும் வரையில் உணவூட்டுவதில் அவைகள் அக்கரைகாட்டுகின்றன. இவற்றைப் படைத்த அல்லாஹ் மிகத்தூய்மையானவன், மகா கருணையாளன் அச்சிறிய படைப்புகளின் பலவீனம் அறிந்து அவற்றின் நிலமைகளை சீர் செய்து, அவற்றுக்கு உதவிசெய்வதற்கான ஒழுங்குகளை தயார் செய்து வைத்திருப்பது கூட அவனின் கருணையின் வெளிப்பாடாகும்.